[X] Close

எங்களிடமிருந்து சீனா, இந்தியா சுரண்டுகிறது: ட்ரம்ப் குற்றச்சாட்டு


trump-trade-war

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 17:41 pm
  • அ+ அ-

தங்கள் நாட்டிலிருந்து சீனா ஒரே ஆண்டில் 3.5 கோடி ரூபாய் வரை சுரண்டி சம்பாதித்து வளமாக உள்ளது என்றும், அமெரிக்காவை இந்தியா, சீனா போன்ற நாடுகள் உண்டியல் போல பயன்படுத்திக் கொள்கின்றன என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து சாடி வருகிறது. பிற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் குறைந்த வரி இருக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு மட்டும் அந்தந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது என ட்ரம்ப் புகார் எழுப்பி வருகிறார்.

அண்மையில் இரு நாடுகளும் மற்ற நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய ‘வர்த்தகப் போர்’ நடைபெறும் சூழல் உருவானது. இந்த நிலையில் அமெரிக்கா, சீனப் பொருட்களுக்கு, (இந்திய மதிப்பில்) சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரி விதித்துள்ளது. குறிப்பாக சீனாவின் இணையத் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பல நாடுகளும் விமர்சித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது குறித்து சிலர் குறை கூறுகின்றனர். ஆனால் உலகச் சந்தையில் அமெரிக்க பொருட்களை பின்னுக்கு தள்ள பல நாடுகளும் சதி செய்கின்றன. அமெரிக்காவில் எந்த வரியும் இல்லாமல் சீனா பல கோடி ரூபாய் குவித்து வருகிறது.

ஒரு ஆண்டில் 35 லட்சம் கோடி ரூபாய் வரை அமெரிக்காவிடம் இருந்து சீனா லாபம் சம்பாதித்துள்ளது. இதையே தான் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் செய்கின்றன. எங்களை உண்டியல் போலப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் பணத் தேவைக்கு எங்களைப் பயன்படுத்திக் கொள்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது’’ என்றார் ட்ரம்ப்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close