[X] Close
 

ரிப்போர்டரா நடிகரா?- வைரலாகும் வெதர் ரிப்போர்ட் வீடியோ; கலாய்க்கும் நெட்டிசன்கள்


weather-reporter-acts-like-hurricane-is-blowing-him-over

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Sep, 2018 18:47 pm
  • அ+ அ-

வானிலை செய்திகளை களத்தில் இருந்து சொல்லும் நிருபர்களுக்கு கொஞ்சம் நடிப்பும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுபோல் செய்தியை வழங்கியிருக்கிறார் தி வெதர் சேனலின் நிருபர் ஒருவர்.

அட்லாண்டிக் கடலில் உருவான, 'புளோரன்ஸ்' புயலாக் அமெரிக்காவில் கடும் சூறாவளி காற்று வீசுகிறது. புயல் தாக்கியதால் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை பெய்து வருகிறது.

இதுவரை  புளோரன்ஸ் புயலுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். பல இடங்களில் மரங்கள்  வேரோடு சாய்ந்து வீடுகள் பலத்த சேதமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த செய்தியை நேரலையில் வழங்கிய நிருபர் சூறாவளிக் காற்றில் நிற்க முடியாமல் தவிப்பதுபோல் அங்குமிங்கும் அசைந்து பேலன்ஸ் செய்கிறார். அவர் துடிப்பாக பார்ப்பவர்கள் ஐயோ பாவம் என்று பரிதாபப்படும் அளவுக்கு செய்தியை சொல்லிக் கொண்டிருக்க பின்னால் இரண்டு பேர் சாகவாசமாக நடந்து செல்கின்றன.

அவர்களை சூறாவளி சற்றும் அசைக்கவில்லை. இது நேரலையில் ஒளிபரப்பாகிவிட்டது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து டி.ஆர்.பி.க்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள் என கலாய்த்து வருகின்றனர்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close