[X] Close
 

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா!- சினிமா பாணியில் பெண்ணைத் தேடிய இளைஞர்


youth-searches-for-his-lady-love

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Sep, 2018 17:18 pm
  • அ+ அ-

நடைமுறைக்கு சாத்தியமற்ற சில விஷயங்களை சினிமாவில் நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.

எதோ ஒரு உணவகத்தில் ஒரே ஒரு முறை பார்த்த பெண்ணை அவரது பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு தேடிப் பிடித்திருக்கிறார் ஒரு இளைஞர்.

த்ரிஷா நடித்த எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ரயிலில் பார்த்துக் கொண்ட இருவரும் எந்தத் தகவலும் இல்லாமலேயே ஒருவரை ஒருவரைத் தேடித் திரிவர். அந்த தவிப்பை சந்திப்போமா இருவரும் சந்திப்போமா?! என்ற பாடலில் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

அதேபோல் தான் கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உணவகத்தில் ஒரு பெண்ணை பார்த்துவிட்டு, அவரை பிடித்துப்போக அவரிடம் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். அப்பொழுது, அந்த பெண் தவறான எண்ணை கொடுத்துவிட ஏமாந்து போகிறார். ஆனால், காதல் அவருக்கு உந்து சக்தியாக அமைய நிக்கோல் என்ற அந்த பெயர் கொண்ட 246 பெண்களுக்கு இ மெயில் அனுப்பியிருக்கிறார்.

எல்லா இமெயிலிலும் முதல் வரி ஒன்றுதான். "நாம் உணவகத்தில் பார்த்துக்கொண்டோம்.  உங்களிடம் தொலைபேசி எண்ணை நான் கேட்டபோது, நீங்கள் தவறான எண்ணை கொடுத்துவிட்டீர்கள்" என்று எழுதியுள்ளார். அப்படி ஒரு மெயில் அவர் தேடும் பெண்ணின் தோழிக்கு செல்ல அவர் அந்தப் பெண்ணிடம் காண்பிக்க நிக்கோல் அந்த இளைஞருக்கு குறுந்தகவல் அனுப்பி, சில நாட்களில் அவரை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

சைபர் உலகில் தேடல் எளிதாகியிருக்கிறது என்பதற்கான சாட்சியே இந்த செய்தி.

இதே போன்ற உணர்வை வெளிப்படுத்தும் சில தமிழ் பாடல்களின் லின்க் கீழே:

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close