[X] Close
 

வெளிநாட்டில் படிக்க செல்லும் மகளுக்காக 12 பணிப்பெண்களை நியமித்த கோடீஸ்வர இந்தியர்!


an-indian-billionaire-s-daughter-is-hiring-12-staff-to-look-after-her-at-university

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Sep, 2018 16:22 pm
  • அ+ அ-

வெளிநாட்டில் படிக்க செல்லும் தனது மகளுக்காக 12 பணிப்பெண்களை நியமித்துள்ளாராம் கோடீஸ்வர தந்தை ஒருவர். அந்த தந்தை யார் என்று அடையாளம் வெளியாகவில்லை.

ஆனால், பத்திரிகையில் பணிப்பெண் தேடி விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பது குறித்து லண்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தி சன் ஆங்கில பத்திரிகையில் அந்த விளம்பரம் வெளியானதாகத் தெரிகிறது.

அந்த விளம்பரத்தில் ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் அண்ட்ரூஸ் பல்கலைகழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு தனது மகள் படிக்கப்போவதாகவும் அவருக்காக ஒரு மாளிகையை வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மாளிகையில் மகளுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்க 12 பணிப்பெண்கள் தேவை என்றும் விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு ஆண்டு சம்பளம் 30 ஆயிரம் பவுண்டுகள் என கூறப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.28.5 லட்சமாகும்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close