[X] Close

அறிமுகமில்லா ஆணும் பெண்ணும் சேர்ந்து உண்ண தடை: இந்தோனேசிய மாகாணத்தில் புதிய சட்டம்


ache-province-sharia-law

ஆசே மாகாணத்தில் ஒரு உணவகம் | படம்: ஏ.எஃப்.பி

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 11 Sep, 2018 17:24 pm
  • அ+ அ-

இந்தோனேசியாவின் ஆசே மாகாணத்தில் ஒரு மாவட்டத்தில், உறவினர் அல்லாத ஆணும் பெண்ணும் சேர்ந்து வெளியே உண்ணுவது தடை செய்யப்பட்டுள்ளது. இது பெண்கள் ஒழுங்காக நடந்துகொள்ள உதவும் என்று ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியா அதிக முஸ்லிம் மக்கள் வாழும் நாடு. அதில் ஆசே மாகாணம் மட்டுமே இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை விதித்துள்ளது. இதற்கு முன்னரே பெண்களுக்கான ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதித்ததற்காகவும், ஓரினச் சேர்க்கையாளர்கள், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், மது குடிப்பவர்களை பொதுவில் தண்டித்ததற்கு இந்த மாகாணம் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்த புதிய சட்டம் சுமத்ரா தீவில் இருக்கும் ஒரு மாவட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் அவர்களது ஆண் உறவினர் அல்லது கணவன் ஆகியோருடன் மட்டுமே உணவகங்களில், காஃபி ஷாப்களில் உணவருந்தமுடியும். சக ஊழியராக இருந்தாலும் கூட அவருடன் உணவைப் பகிரக் கூடாது.

உள்ளூர் ஷரியா அலுவலகத்தின் தலைவர் ஜஃப்லிவான் பேசுகையில், "இதன் நோக்கம் பெண்களின் கண்ணியத்தை காப்பதே. அதனால் அவர்கள் இன்னும் சவுகரியமாக உணர்வார்கள். ஒழுங்காக நடந்து கொள்வார்கள். ஷரியா சட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது" என்றார்.

இந்த சட்டத்தின் இன்னொரு விதிப்படி, இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக வரும் பெண்ணுக்கு, உறவினர்களுடன் இல்லாத பெண்ணுக்கு உணவகங்களில் சேவை கிடையாது. மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தோனேசியாவின் பந்தா ஆசே என்ற மாகாணத்தில் துணையின்றி வரும் பெண்களுக்கு கஃபே, விளையாட்டு அரங்குகள் 11 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்ற தடை விதிக்கப்பட்டது.

2013ல் சுமத்ராவின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகர் ஒன்றில், ஆண்களுடன் பைக்கில் செல்லும் பெண்கள் ஒரு பக்கமாக மட்டுமே உட்கார வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. நகர மேயர், ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் இரண்டு பக்கமும் கால்கள் போட்டு உட்காருவது முறையற்றது என்று கூறியிருந்தார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close