[X] Close
 

பெண் அதிகாரியை 'வாயை மூடு' என்று திட்டியவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்: இங்கு அல்ல பெல்ஜியத்தில்


a-belgian-man-convicted-of-sexism-in-the-public-space

  • பாரதி
  • Posted: 10 Mar, 2018 16:37 pm
  • அ+ அ-

பொது இடத்தில் பெண் அதிகாரியை அவதூறாகப் பேசி அவமதித்த ஒருவருக்கு பெல்ஜியம் நாட்டு நீதிமன்றம் ரூ.2 லட்சம் அபராதமும் அதைக் கட்டத்தவறினால் ஒரு மாதம் சிறைக்குச் செல்ல வேண்டும் என்றும் தண்டனை வழங்கியுள்ளது.


போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் சென்றவரை பணியில் இருந்த பெண் போக்குவரத்து போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளார். அதற்கு அந்த நபர், "வாயைமூடு. ஒரு பெண்ணிடம் நான் பேச விரும்பவில்லை. மேலும் பெண்ணுக்கு போலீஸ் அதிகாரியாக இருக்கும் தகுதியும் இல்லை" எனக் கூறியிருக்கிறார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட அவர் மீது பொது இடத்தில் பெண்ணை அவமதித்ததற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


பெல்ஜியம் நாட்டில் கடந்த 2014-ல் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி வெறுப்பை உமிழும் வகையில் பேசினாலோ பாலின பேதத்தைக் காட்டினாலோ அது தண்டனைக்குரியதாக்கப்பட்டது.


இத்தகைய சட்டத்தை அந்நாடு அமல்படுத்தக் காரணமாக இருந்தது வுமன் ஆஃப் தி ஸ்ட்ரீட் (Woman of the Street) என்ற ஓர் ஆவணப்படம். பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் பெண்களுக்கு எதிராக எத்தகைய வன்கொடுமைகள் அன்றாடம் நடக்கின்றன என்பதை சோஃபீ பீட்டர்ஸ் என்ற மாணவி ஒருவர் ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து ஆவணப்படமாக்கினார். சோஃபீ பீட்டர்ஸ் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். இந்த ஆவணப்படம் வைரலாகவே அதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு பெல்ஜியம் நாடு இத்தகைய சட்டத்தை அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close