[X] Close
 

காத்திருக்க பொறுமையின்றி டிராஃபிக் சிக்னலை உடைத்த சீன இளைஞர்: சிசிடிவி வீடியோவில் சிக்கினார்


impatient-driver-knocks-off-signal

டிராபிக் சிக்னலை உடைக்கும் இளைஞர்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 08 Sep, 2018 17:32 pm
  • அ+ அ-

டிராஃபிக் சிக்னலில் காத்திருப்பது இன்று பலருக்கு பொறுமையை சோதிக்கும் விஷயமாக உள்ளது. பொதுமக்கள் நலனுக்குத்தான் டிராஃபிக் சிக்னல் உள்ளது, அதை மீறுவது சட்டவிரோதம், அதை மீறினால் சக மனிதருக்குத்தான் பிரச்சினை என்பதையெல்லாம் நினைக்கும் நிலைமையில் இன்று பலர் இல்லை. 

எந்தவொரு டிராஃபிக் சிக்னலிலும், வண்டிகள் நிற்க வேண்டிய எல்லைக் கோடை தாண்டி நின்று, சிறிய இடைவெளி கிடைத்தாலும், சிவப்பு விளக்கு இருக்கும்போதே சாலையைக் கடக்கும் பலரை தினசரி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் ஒரு இளைஞர் இதில் அடுத்த படிக்கே சென்று விட்டார். 36 வயது இளைஞர் ஒருவர் வெகுநேரம் சிக்னலில் காத்திருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து தனது காரை விட்டு இறங்கி, ரோட்டின் நடுவில் இருக்கும் சிக்னல் கம்பத்தை தரையில் சாய்த்து உடைத்துவிட்டார். பின் தன் காருக்குத் திரும்பியுள்ளார். இளைஞரின் இந்த செயல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இளைஞரைக் கண்டுபிடித்த போலீஸ் 1 வாரம் போலீஸ் காவலில் வைத்ததுடன், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காக அபராதமும் விதித்துள்ளது. இளைஞர் சிக்னலை உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


தனக்கு ஏற்றவாரு கோடுகள் வரையும் இளைஞர்

இதே போல, சீனாவின் ஜியாங்க்ஸு மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், தினசரி பஸ் பயணம் டிராஃபிக் காரணமாக நீண்ட நேரம் எடுப்பதால், தனக்கு ஏற்றார் போல சாலையில் அம்புக்குறிகளை வரைந்து டிராஃபிக்கை மாற்றியுள்ளார் 29 வயது இளைஞர் ஒருவர்.  அவருக்கு 200 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. 

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close