[X] Close
 

செல்ஃபிஷ் மக்களோடு செல்ஃபி: ஒரு தாயின் வேதனைப் பகிர்வு


mom-forced-to-stand-and-breastfeed-in-train-after-none-offer-seat

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Sep, 2018 16:14 pm
  • அ+ அ-

செல்ஃபிக்களில் பலவகை இருக்கு நண்பர்களுடன் செல்ஃபி. சாகச செல்ஃபி, ஏன் மணமேடை செல்ஃபி, மருத்துவமனை செல்ஃபி என்றெல்லாம் இருக்கின்றன. ஆனால், அண்மையில் லண்டன் ரயிலில் ஒரு பெண் தன் கைக்குழந்தையுடன் பகிர்ந்த செல்ஃபி இணையத்தில் வைரலாக்கியுள்ளது.

இயந்திர உலகில் மக்களின் இதயங்களும் இயந்திரமாகிவிட்டதோ என்று விமர்சிக்கும் அளவுக்கு பலரையும் கோபப்படுத்தியுள்ளது அந்த செல்ஃபி.

லண்டனில் பயணிகள் ரயிலில் தனது 6 மாத கைக்குழந்தையுடன் ஏறியிருக்கிறார் ஹிட்சன்ஸ் (32). அவரது குழந்தை திடீரென பசியில் அழ ஆரம்பிக்க குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கூட்டமாக இருந்த அந்த ரயிலில் யாராவது இடம் தருவார்களா என ஹிட்சன்ஸ் பார்த்திருக்கிறார். யாருமே எழுந்திருக்கவில்லை. நின்றவாறே குழந்தையின் பசியை போக்கிய தாய். சுயநலமான மக்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை இன்ஸ்டாகிராமிம் பகிர்ந்தார். அதற்கு உச்சுக் கொட்டியவர்கள் பலர். அவர்களாவது இனி இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ளும்போது ஆதரவாக நடக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

[X] Close