[X] Close
 

கீழே விழுந்த பர்ஸை எடுத்துக் கொண்டு ஓடும் நாய்: அழகிய திருட்டு என கொண்டாடும் நெட்டிசன்கள்


dog-grabs-man-s-purse

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 08 Sep, 2018 14:56 pm
  • அ+ அ-

நாய் ஒன்று, கீழே விழுந்த பர்சை எடுத்துக் கொண்டு போகும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. 

சீனாவில், கடை ஒன்றில், அதன் ஊழியர்கள் போல காணப்படும் சிலர், ஓய்வு நேரத்தில் கடைக்குள் உட்கார்ந்து சீட்டு விளையாடுகின்றனர். அப்போது அதில் ஒருவரது பர்ஸ் அவரது பாக்கெட்டிலிருந்து கீழே விழுகிறது. அந்தக் கடையில் திரிந்து கொண்டிருந்த இரண்டு நாய்களில் குட்டி நாய் ஒன்று, கீழே விழுந்த பர்சை வாயில் கவ்வியபடியே கடையை விட்டு வெளியேறுகிறது. கதவைத் தாண்டும் முன்னர் ஒருமுறை பர்ஸ் கீழே விழ, சுதாரித்து மீண்டும் அதை கவ்விக்கொண்டு வெளியே செல்கிறது அந்த குட்டி நாய்.

இந்த சிசிடிவி வீடியோ தற்போது சீன மக்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அது பர்ஸை எடுக்க பழக்கப்பட்ட நாயாக இருக்கும் என்ற சிலரும், இது அழகான திருட்டு என்று சிலரும் வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். 

கீழே விழுந்த பர்ஸை உணவாக நினைத்து கூட நாய் எடுத்திருக்கலாம் என்றோ, அந்தக் கடையில் சகஜமாகத் திரியும் நாயென்றால் அது அங்கு வேலை செய்பவர்களுக்குப் பழக்கப்பட்ட நாயாக இருக்கலாம் என்றோ யாரும் சிந்திக்கவில்லை என்றே தெரிகிறது. பாவம் அந்த நாய்.
 

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close