[X] Close

பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகளின் பேமன்ட் கார்டு விவரங்கள் திருட்டு


british-airways-hacked-with-details-of-380-000-cards-stolen

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Sep, 2018 11:24 am
  • அ+ அ-

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன சேவையை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை பயன்படுத்திய பயணிகளின் பேமன்ட் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "எங்களது இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளது. மிக அவசர சூழலாகக் கருதி இது குறித்து புலன் விசாரணை மேற்கொண்டுள்ளோம். இந்த திருடப்பட்ட விவரங்களில் பயண விவரமோ பாஸ்போர்ட் விவரமோ அடங்காது. பயணிகள் டிக்கெட் பணம் செலுத்திய வகையில் பேமன்ட் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளன.

இதை நாங்கள் சரி செய்துவிட்டோம். இப்போது எங்களது இணையதளம் வழக்கம்போல் இயங்குகிறதி. காவல்துறைக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இது குறித்து நாங்கள் புகார் தெரிவித்திருக்கிறோம்.

நடந்த குற்றத்துக்காக நாங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுபவர்கள் தத்தம் வங்கிகளில் கார்டு பிரிவைத் தொடர்பு கொண்டு அவர்களது பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close