[X] Close

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு இளசுகள் மத்தியில் மவுசு குறைகிறது: ஆய்வில் தகவல்


facebook-twitter-getting-unpopular-says-report

  • Team
  • Posted: 10 Mar, 2018 12:30 pm
  • அ+ அ-

அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று மேற்கொண்டு ஆய்வின்படி 21-ம் நூற்றாண்டில் இளம் வயதுவந்தோர் மத்தியில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் மீதான ஈர்ப்பு குறைகிறது எனத் தெரியவந்துள்ளது.


அந்த அறிக்கையின்படி 18 வயது முதல் 24 வயது உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் இருந்து ஒருவித நிவாரண விடுவிப்பைத் தேடுகின்றனர் எனத் தெரிகிறது.


கடந்த டிசம்பர் மாதம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி 18 வயது முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 50% பேர் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிண்டர் ஆகிய சமூக வலைதளங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே விரும்புகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.


இருப்பினும் ஸ்நாப்சாட் எனப்படும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளும் அப்ளிகேஷனுக்கான மவுசு மட்டும் இந்த இளசுகளிடம் இன்னும் குறையாமலேயே இருக்கிறது.


ஆய்வுக்கு சம்மதித்தவர்களில் 41% இளம் பயன்பாட்டாளர்கள், சமூக வலைதளங்களில் தாங்கள் அதிக நேரத்தை வீணடிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் ஆன்லைன் வர்த்தகத்துக்காகவே இத்தகைய சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.


1994-க்குப் பின்னர் பிறந்தவர்களில், சமூகவலைதளங்களில் வரும் விளம்பர ஃபீட்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர். 57% பேர் பிரபலங்கள் ஒரு பொருளுக்கு விளம்பரதாரராக இருப்பதாலேயே சில பொருட்களை சமூக வலைதளங்கள் வாயிலாக ஆன்லைனில் வாங்கியதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close