[X] Close

ஜப்பானில் 25 ஆண்டுகள் இல்லாத கடும் புயல்: 7 பேர் பலி; காயம் 100


japan-puyal

  • kamadenu
  • Posted: 05 Sep, 2018 12:01 pm
  • அ+ அ-

இந்து குணசேகர்

ஜப்பானில் 25 ஆண்டுகளாக இல்லாத வகையில், கடுமையான புயல் தாக்கியது. இதில்  7 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ஜப்பானில் மேற்குப் பகுதியில், ஜெபி புயல் தாக்கியதில் பலத்த சேதம் உள்ளாகியுள்ளது.

இதுவரை புயல் தாக்குதலுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் படகுகள், மரங்கள் மற்றும் மின்கம்பிகள் சேதமடைந்துள்ளன. ஜப்பானில் கடந்த 25 வருடங்களில் இல்லாததாக, புயலினால் ஏற்பட்ட சக்தி வாய்ந்த தாக்குதலாக இது கருதப்படுகிறது" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close