[X] Close
 

மனைவிக்கு நன்றிக்கடன் செலுத்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கணவர்


minister-quits-for-his-wife

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Sep, 2018 14:41 pm
  • அ+ அ-

சம உரிமை பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கும் மனைவிகள் இருக்கும் இதே உலகில்தான் மனைவிக்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கணவரும் இருக்கிறார். நார்வே நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது மனைவியின் வேலைவாய்ப்புக்காக பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்.

நார்வே நாட்டைச் சேர்ந்தவர் கெடில் சால்விக் ஆல்சன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். கெடில் கடந்த வாரம் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, "எனது மனைவி எனக்கு பல்வேறு வகையிலும் பக்கபலமாக இருந்தார். அதனால் அமைச்சராக எனது பணியை சிறப்பாகச் செய்தேன். இப்போது அவருக்கு அமெரிக்காவிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு நன்றிக்கடன் செலுத்த விரும்புகிறேன். மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு செல்கிறேன். எனவே, அமைச்சர் பதவியை நான் ராஜிநாமா செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close