[X] Close

கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டும் பாகிஸ்தான்?- என்ன சொல்லும் இந்தியா!


after-uae-pakistan-offers-help-to-flood-hit-kerala

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Aug, 2018 10:12 am
  • அ+ அ-

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக அந்நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் மக்களின் சார்பில் பிரார்த்தனைகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கேரளாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே யுஏஇ அறிவித்த ரூ.700 கோடி நிதியுதவியைப் பெறுவதில் மத்திய அரசு கெடுபிடி காட்டிவரும் வேளையில் பாகிஸ்தானின் இந்த உதவிக்கரத்தை ஏற்குமா இல்லை புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் கேரளாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close