[X] Close
 

பேஜ் வியூவ்ஸ் பிரச்சினை: அமெரிக்காவில் ஃபேஸ்புக்கை முந்தியது யூடியூப்


youtube-to-replace-facebook-as-no-2-website-in

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Aug, 2018 17:09 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் முன்னணி இணையதளங்கள் வரிசையில் ஃபேஸ்புக்கை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது யூடியூப்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மட்டும் ஃபேஸ்புக்கின் மாதாந்திர பேஜ் வியூவ்ஸ் 8.5 பில்லியன் என்றளவில் இருந்து சராசரியாக 4.7 பில்லியன் என்றளவில் இருக்கிறது. இதன் காரணமாகவே யூடியூப்
டாப் 10 லிஸ்டில் முன்னேறியுள்ளதாம்.

ஃபேஸ்புக்கின் ட்ராஃபிக் அதிகரித்திருந்தாலும்கூட 2 ஆண்டுகள் இழப்பை ஈடுகட்ட முடியாத நிலையில் இருக்கிறது என்று சிஎன்பிசி தொலைக்காட்சி நடத்திய சந்தை ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு அறிக்கையை வெளியிட்ட ஃபேஸ்புக், வட அமெரிக்காவில் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் அன்றாட எண்ணிக்கை ஏற்ற இறக்கமின்றி தட்டையாக இருப்பதாகக் கூறியது. ஐரோப்பாவில் ஃபேஸ்புக் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததாகவும் கூறியது.

அதேவேளையில் கூகுளின் யூடியூப் சேனலின் பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர் என்கிறது அந்த ஆய்வு. 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close