[X] Close

சுஷ்மாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய உஸ்பெக் பெண்


sushma-swaraj-by-her-side-uzbek-woman-singing-ichak-dana-bichak-dana-is-going-viral

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Aug, 2018 15:23 pm
  • அ+ அ-

இந்திப் பாடலைப் பாடிக்காட்டி வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அசரச் செய்திருக்கிறார் உஸ்பெக் நாட்டு மூதாட்டி ஒருவர்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராம் கசகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.

உஸ்பெக்கிஸ்தான் சென்ற அவருக்கு அந்நாட்டுப் பெண் ஒருவர் ஆச்சர்யம் தந்தார். உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் பாலிவுட் திரைப்படங்கள் பிரபலமாக இருக்கின்றன. அதிலும் அந்தக்கால நடிகர்கள் ராஜ் கபூருக்கும் நர்கீஸூக்கும் இன்னும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்தியர்கள் வந்தால் அவர்களை பாலிவுட் திரைப்படங்களுடந்தான் உஸ்பெக்கிஸ்தான் நாட்டவர்கள் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர். அந்த வகையில் சுஷ்மா ஸ்வராஹ் உஸ்பெக்கிஸ்தான் சென்றிருக்க அங்கே அவரை சந்தித்த உஸ்பெக் பெண் ஒருவர் ஸ்ரீ 420 Shree 420 என்ற படத்தில் உள்ள ஈச்சக் தானா பீச்சக் தானா (Ichak Dana Bichak Dana ) என்ற பிரபலமான பாடலைப் பாடினார்.

இந்தக் காட்சியை வெளியுறவு அமைச்சக அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close