[X] Close
 

3.9 சதவீதமாகக் குறைந்த வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை: புதிதாக 1,57,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கம் - இங்கல்ல, அமெரிக்காவில்


american-unemployment

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 04 Aug, 2018 16:11 pm
  • அ+ அ-

ஜூலை மாதம் அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. புதிதாக 1,57,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த மாதம் 1,95,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வல்லுநர்கள் கணித்ததற்கு குறைவாக இருந்தாலும் முழு வேலைவாய்ப்பு என்ற இலக்கை அமெரிக்க பொருளாதாரம் நெருங்கி வருகிறது. 

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கடந்த 94 மாதங்களாக ஏறுமுகத்தில் உள்ளது. இது ஒரு சாதனையாகும். இந்த வருடத்தில் மூன்றாம் முறையாக வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை 4 சதவீதத்துக்குக் குறைவாக இறங்கியுள்ளது.  

ஊழியர்களின் சராசரி சம்பளம் ஒரு மணி நேரத்துக்கு 27.05 டாலராக இருக்கிறது. இது கடந்த வருடம் இதே மாதம் இருந்ததை விட 2.7 சதவீதம் அதிகமாகும். இது இன்னும் அதிகமாகும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். 

1970ஆம் ஆண்டுக்கு பிறகு, வேலைவாய்ப்பின்மை 4 சதவிதத்துக்கும் கீழே செல்வது இது எட்டாவது முறையாகும். இதில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு 3 மாதங்கள் இந்த எண்ணிக்கை 4 சதவிதத்துக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் புதிதாக அல்லது மீண்டும் வேலைகளில் இணைந்துள்ளனர். அமெரிக்காவில் வாழும் ஸ்பானிஷ் பேசும் மக்களின் வேலைவாய்ப்பும் இதே காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. 

- ஐ.ஏ.என்.எஸ்

[X] Close