[X] Close
 

அமெரிக்காவின் வர்த்தக விண்கலத்தில் பயணம் செய்ய சுனிதா வில்லியம்ஸ் உட்பட 9 விண்வெளி வீரர்கள் தேர்வு 


nasa-names-sunita-williams-8-others-for-first-space-flights-on-commercial-spacecraft

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Aug, 2018 13:59 pm
  • அ+ அ-

அமெரிக்கா சார்பில் வர்த்தக ரீதியில் புதிதாக தயாராகும் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் சுனிதா வில்லியம்ஸ் உட்பட 9 பேரை நாசா தேர்வு செய்துள்ளது.

பல ஆண்டுகளாக வர்த்தக விண்கலம் தயாரிப்புப் பணியில் கவனம் செலுத்திவந்த நாசா தற்போது அந்தப் பயணத்துக்கான விண்வெளி வீரர்கள் குழுவினை தேர்வு செய்திருக்கிறது.

தி போயிங் கம்பெனியுன் ஸ்பேஸ் எக்ஸ் கம்பெனியும் இணைந்து தயாரித்த இந்த வர்த்தக விண்கலத்தில் முதலில் சுனிதா உட்பட 9 பேரும் பயணிப்பார்கள் என நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பிவைப்பதற்காக அமெரிக்காவின் விண்கலங்கள் கடந்த 2011-ம் ஆண்டுடன் ஓய்வுபெற்றன. இதையடுத்து, இப்போது ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தின் உதவியுடன் அமெரிக்க வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நாசாவுக்கான விண்கலங்களை ஸ்பேஸ்எக்ஸ் (க்ரூ டிராகன்) மற்றும் போயிங் (சிஎஸ்டி-100) ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த விண்களம் தயாரான நிலையில் இனி விண்வெளி வீரர்களை அனுப்ப அமெரிக்கா ரஷ்யாவை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.
நாசாவின் நிர்வாகி ஜின் பிரிண்டஸ்டைன், "அமெரிக்க மண்ணிலிருந்து அமெரிக்க ராக்கெட் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாலை நெருங்கிவிட்டோம்" எனக் கூறியிருக்கிறார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close