[X] Close

உலகக் கோப்பை கால்பந்து ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!- காரணம் புதின்


putin-signs-law-allowing-visa-free-entry-for-world-cup-fans

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Aug, 2018 11:20 am
  • அ+ அ-

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விசா தொடர்பான புதிய சட்டத்தில் கையெழுத்திட்டதால் உலகக் கோப்பை கால்பந்து ரசிகர்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.  

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்றது. ரஷ்யாவின் 11 நகரங்களில் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ஒரு மாதம் இந்த விளையாட்டுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோத பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்க்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்தும் கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவில் குவிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெறுவதுடன் ஃபேன் ஐடி (ரசிகர் ஐடி) பெறுவதும் கட்டாயமாக இருந்தது.

கால்பந்து போட்டி நடந்தபோது 1.5 மில்லியன் ஃபேன் ஐடிக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஃபேன் ஐடி வைத்திருப்பவர்களுக்கு ரஷ்யாவில் கால்பந்து திருவிழா முடியும்வரை விசா இல்லாமலேயே தங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஃபேன் ஐடி வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டு முழுவதும் ரஷ்யாவுக்கு எப்போது வேண்டுமானாலும் விசா இல்லாமலேயே வந்து செல்லும் வகையில் புதிய விசா சட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டிருக்கிறார்.

இதனால் கால்பந்து திருவிழாவுக்காக ரஷ்யா வந்து சென்ற ரசிகர்கள் மீண்டும் அங்கு சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close