[X] Close

கூகுள் மேப்ஸில் புதிய வசதி


google-maps-location-sharing-now-adds-phone-s-battery-life

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Aug, 2018 17:15 pm
  • அ+ அ-

கூகுள் மேப்ஸ் இருப்பதாலேயே செல்லாத ஊருக்குக்கூட எளிதாக நாம் வழி கண்டுபிடித்துவிடுகிறோம். வீட்டின் முகவரியை வைத்துக் கொண்டு தெருத்தெருவாக அலைந்தது எல்லாம் அந்தக்காலம் கையில் ஃபோன் வைத்துக்கொண்டு சரியாக வீட்டு காலிங் பெல்லை அழுத்துவதுதான் இந்தக்காலம்.

இப்படி கூகுள் மேப்ஸ் நமக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது. தற்போது புதியதொரு அம்சத்தையும் கூகுள் மேப்ஸ் இணைத்துள்ளது. அதாவது கூகுள் மேப்ஸில் உங்கள் இருப்பிடம் குறித்த தகவலை நீங்கள் யாருடனாவது பகிரும்போது உங்கள் மொபைல் ஃபோனின் பேட்டரி லைஃப் எவ்வளவு என்பதும் அவர்களுக்குச் சென்று சேர்ந்துவிடும்.

இதன் மூலம் உங்களுடன் தகவலைப் பகிர்ந்த நபர் ஏன் உங்களை ஃபோனில் தொடர்பு கொள்ளவில்லை என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.

பயணம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்புக்கு இந்த அம்சம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close