[X] Close

இம்ரான் பதவியேற்பு விழாவில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பில்லாதது ஏன்?


imran-khan-oath-ceremony-no-foreign-leader-will-be-invited

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Aug, 2018 17:16 pm
  • அ+ அ-

பதவியேற்பு விழாவில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுக்காதது சர்ச்சையாகி வருகிறது. பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை.

இந்த நிலையில் மற்ற கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. 

பாகிஸ்தானின் 71 ஆண்டு கால வரலாற்றில் 4 முறை ராணுவ ஆட்சி இருந்திருக்கிறது. நடந்தது 3-வது ஜனநாயகத் தேர்தல்.
இந்நிலையில் இம்ரான் கானின் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் ஃபவாத் சவுத்ரி, "இந்த நிகழ்ச்சிக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் யாரையும் அழைப்பதில்லை என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது முழுக்க தேசிய நிகழ்ச்சியாக இருக்கும். இம்ரானின் சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கின்றனர். நிகழ்ச்சி மிகவும் எளிமையாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், உலகம் முழுவதும் வெளியுறவு தொடர்பு நோக்கர்கள் இம்ரானின் இந்த செயலை வரவேற்கவில்லை. பாகிஸ்தானில் தீவிரவாதம் இன்னும் வேரூன்றி இருக்கும் நிலையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த வெளிநாடுகளுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம். அதுவும் குறிப்பாக இந்தியா போன்ற அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும். ஒருவேளை இம்ரான் இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தால் அது வரலாற்று சிறப்புமிக்கதாக அமைவதோடு இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை துளிர்க்கச் செய்யவும் உதவியிருக்கும் என கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சித்து மட்டும் இம்ரான் அழைப்பை ஏற்றுள்ளார். அதனை வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close