[X] Close

படுக்கை அருகே படுத்திருந்த மலைப்பாம்பு; பீதியில் உறைந்த பெண்


woman-wakes-to-find-python-in-kensington-bed

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Jul, 2018 15:36 pm
  • அ+ அ-

கனவில் மலைப்பாம்பு வந்தாலே பதறிவைத்துவிடும். அப்படிப்பட்ட மலைப்பாம்பு நமது அருகே சுருண்டு படுத்திருந்தால் எப்படி இருக்கும். லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்த பய உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

லண்டனின் கென்சிங்டன் நகரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது வீட்டின் படுக்கை அறைக்குள் மலைப்பாம்பு புகுந்துவிட்டதாக பதறிக் கொண்டு பாதுகாப்புத் துறை ஃபோன் செய்துள்ளார்.

இதனையடுத்து அங்கு விரைந்த பாம்பு பிடிக்கும் நிபுணர் ஜில் சேண்டர்ஸ் வீடு முழுவதும் மலைப்பாம்பை தேடியிருக்கிறார். ஆனால், அந்த மலைப்பாம்பை எங்கும் கண்டுபிடிக்கவில்லை.

ஆனால், அடுத்த நாள் தொடர்ந்த தேடுதல் வேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பின் தாழ்வாரத்தின் ஒரு பகுதியில் அந்த பாம்பு மறைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ஜில் சேண்டர்ஸ், "ராயல் பைத்தான் வகை மலைப்பாம்புகளை சிலர் வளர்ப்புப் பிராணிகளாகப் பராமரிக்கின்றனர். அப்படி யாராவது ஒருவர் வீட்டிலிருந்துதான் இந்த பாம்பு தப்பித்திருக்க வேண்டும். இவை 5 அடி வரை வளரக்கூடியவை. தனது உடலை பந்துபோல் சுற்றிக்கொள்ளும் திறன் கொண்டதால் இதனை பால் பைத்தான் என்றும் அழைக்கின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவின் கானா, பெனின், டோகோ போன்ற நாடுகள்தான் இந்தவகை மலைப்பாம்புகளின் பிறப்பிடம். இவை 20 ஆண்டுகள் வாழக்கூடியவை" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close