[X] Close

இன்ஸ்டாகிராமில் ஹிட்டான 7 மாத ஜப்பானிய குழந்தை!


7-month-old-japanese-baby-s-hair-take-internet-by-storm

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Jul, 2018 13:27 pm
  • அ+ அ-

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 7 மாத குழந்தையின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆவதுடன் இணையவாசிகளின் இதயங்களுக்கு தூண்டிலும் போட்டிருக்கிறது.

வழக்கமாக கைக்குழந்தை என்றால் கொழு கொழு கன்னங்களும், உருட்டு விழிகளும், கன்னக் குழிகளும், எச்சில் சொட்டும் சிரிப்பும்தான் நினைவுக்கு வரும். ஆனால், ஜப்பானைச் சேர்ந்த சான்சோ என்ற இந்தக் குழந்தை இன்ஸ்டாகிராமில் ஃபேமஸாகக் காரணம் இவை எதுவுமே இல்லை.

அந்தக் குழந்தையின் அடர்த்தியான கூந்தல். 7 மாதக் குழந்தைக்கு இவ்வளவு அடர்த்தியான கூந்தலா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. கருத்த கூந்தல் வளர்ந்திருக்கும் வாகும் அது நெற்றியல் ஸ்டைலாக படரும் காட்சியும் காண்போரின் கண்களை சட்டெனக் கவர்ந்துவிடுகிறது.

அந்தக் குழந்தையின் புகைப்படங்கள் சில..

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close