[X] Close

இதுவரை இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடியில் ஐ.நா., சபை


un-runs-out-of-money-urges-members-to-pay-up

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Jul, 2018 15:19 pm
  • அ+ அ-

ஐக்கிய நாடுகள் சபை இதுவரை சந்தித்திராத அளவுக்கு நிதி நெருக்கடியில் இருப்பதாக அதன் பொதுச் செயலாலர் அண்டோனியோ குத்ரேஸ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா., பொதுச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், "ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய சந்தாவில் நிலுவை வைத்திருப்பதால் சபைக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை இப்படி ஒரு நிதிச்சிக்கல் ஏற்படவில்லை. செலவுகளைக் கட்டுப்படுத்த இனி கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளதாக பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஐ.நா., சபையின் சில திட்டங்களுக்கு நிதி அளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். குறிப்பாக ஐ.நா.,வின் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஆணையத்திற்கு அளிக்கப்படும் நிதியை நிறுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இதுபோன்ற கெடுபிடிகளால் ஐ.நா.,வின் நிதியில் சிக்கல் ஏற்படவில்லை முழுக்க முழுக்க ஐ.நா-வின் உறுப்பு நாடுகள் அளிக்க வேண்டிய கட்டணத்தை தாமதமாக செலுத்துவதாலேயே இந்த நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close