[X] Close

பாகிஸ்தான் தேர்தலில் சில சுவாரஸ்யங்கள்: அத்தனைக்கும் காரணம் பெண்கள்


a-mother-daughter-duo-in-karachi-won-applauds

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Jul, 2018 15:56 pm
  • அ+ அ-

பாகிஸ்தானின் 71 ஆண்டு கால வரலாற்றில் 4 முறை ராணுவ ஆட்சி இருந்திருக்கிறது. இப்போது நடைபெறுவது 3-வது ஜனநாயகத் தேர்தல்.

இன்றைய தேர்தலில் வெடிகுண்டு தாக்குதல் போன்ற கோர சம்பவங்கள் நடந்திருந்தாலும் சற்றே மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சிற்சில சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளன.

இருசக்கர வாகனத்தில் வந்த தாயும் மகளும்..

இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் தாயும் மகளும் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்துள்ளனர். இது குறித்து டான் செய்தி நிறுவனத்துக்கு அவர்கள் அளித்த பேட்டியில், "இங்கு போக்குவரத்து வசதி ஏதுமில்லை. பேருந்துகளும் இல்லை, தனியர் வாகனங்களும் இல்லை. இனி நான் என்ன செய்ய முடியும். அதனால் எனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் செல்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றார்.

பெண்கள் வாக்களிக்க உள்ளூர் மதத் தலைவர்கள் கடும் கெடுபிடி விதித்துவரும் நிலையில் தடைகளைத் தாண்டி தாயும் மகளும் இப்படி ஒன்றாக இருசக்கர வாகனத்தில் வாக்களிக்கச் சென்றது வைரலாகி வருகிறது.

இவர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தவிர இவர்களை பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்றெல்லாம் சிலர் புகழ்ந்து வருகின்றனர்.

71 ஆண்டுகளில் முதன்முறை..
பாகிஸ்தான் நாட்டின் 71 ஆண்டு கால வரலாற்றில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இன்றுதான் முதன்முறையாக வாக்களித்திருக்கின்றனர். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குபாப் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் முதன்முறையாக தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close