[X] Close

இத்தாலி உணவுக்கு ஆசைப்பட்ட செரீனா.. இத்தாலிக்கே கூட்டிச் சென்ற கணவர்


serena-williams-said-she-wanted-italian-food-so-her-husband-casually-flew-her-to-italy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Jul, 2018 12:29 pm
  • அ+ அ-

இத்தாலி நாட்டு உணவை சாப்பிட விரும்புவதாக செரீனா வில்லியம்ஸ் கூற அடுத்த நாளே அவரை இத்தாலிக்கே அழைத்துச் சென்றிருக்கிறர் அவரது கணவர் அலெக்சிஸ் ஒஹானியன்.

ரெட்டிட் துணை நிறுவனரான அலெக்சிஸை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் செரீனா வில்லியம்ஸ். இவர்களுக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.

செரீனாவின் கணவர் ஓஹானியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், "இத்தாலி உணவுக்கு செரீனா ஆசைப்பட்டார். அதனால்.." என்று குறிப்பிட்டு இத்தாலியின் வெனேசியா நகரத்திலிருந்து இருவர் ஒயின் அருந்துவது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்தார்.

அதேபோல் செரீனாவும் இத்தாலியில் தான் தங்கியிருந்த வீட்டின் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். இந்த ஃபோட்டோவும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப் பகிர்ந்து பலரும் எனக்கு ஜப்பானிய உணவு சாப்பிட ஆசை, ஐரோப்பிய உணவு சாப்பிட ஆசை, சீன உணவு சாப்பிட ஆசை என்றெல்லாம் பதிவிட்டு தத்தம் கணவர்களை டேக் செய்தும் வருகின்றனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close