ருவாண்டாவுக்கு பிரதமர் அளிக்கப்போகும் விநோத பரிசு என்ன தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அதற்கு முன்னதாக அவர் ருவாண்டா செல்கிறார்.
ருவாண்டா செல்லும் அவர் அந்நாட்டு அரசுக்கு ஒரு விநோத பரிசைத் தரவிருக்கிறார். உள்ளூரிலேயே வாங்கப்பட்ட 200 மாடுகளை ருவாண்டா நாட்டுக்கு அவர் பரிசாக வழங்கவிருக்கிறார்.
அந்த மாடுகள் ருவாண்டா மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இலவசமாக பசு மாட்டைப் பெறும் பயனாளிகள் அந்த மாடு ஈன்றெடுக்கும் பெண் கன்றை தனது அண்டை வீட்டாருக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்பது அரசின் நிபந்தனை.
ருவாண்டா நாட்டு அரசு கிரிங்கா என்ற திட்டத்தை அண்மையில் அறிவித்தது. அதாவது ஒரு குடும்பத்துக்கு ஒரு பசு என்பதே இத்திட்டம்.
இத்திட்டத்தின்படி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பசு மாடுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
அந்தத் திட்டத்துக்கு உதவும் வகையிலேயே மோடி 200 பசு மாடுகளை அந்நாட்டுக்கு வழங்குகிறார்.