[X] Close
 

20 மைல் நடந்து வேலைக்கு வந்த ஊழியர்: காரைப் பரிசாக அளித்த நிறுவனம்


alabama-removals-employee-gifted-new-car-by-boss-after-walking-20-miles-to-first-day-of-work

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Jul, 2018 15:47 pm
  • அ+ அ-

வேலைக்கு பணியமர்த்தும் போது விண்ணப்பதாரரின் நேர்மையும் அர்ப்பணிப்பையும்தான் சோதிப்பார்கள். அப்படி புதிதாக வேலையில் சேர்ந்த நபர் ஒருவர் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த 20 மைல் நடந்தே வந்து வேலை செய்திருக்கிறார். அதற்கான வெகுமதியையும் பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் வால்டர் கார்ஸ். இவருக்கு பெல்ஹாமில் உள்ள பெல்ஹாப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேலைக்காக புறப்பட்டு வந்தபோது அவரது கார் பாதி வழியிலேயே பழுதாகி நின்றது. ஆனால், முதல் நாள் வேலைக்கு நேரத்தில் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார் வால்டர். இதனால், நடைப்பயணம் மேற்கொண்டார். வழியில் போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தினர். அப்போது வால்டர் தனக்கு நேர்ந்ததைக் கூறினார். 4 மணி நேரம் நடந்திருந்த அவரை போலீஸார் தங்கள் வாகனத்திலேயே அவர் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஜென்னி ஹேடன் லேமி என்பவரது வீட்டுக்கு போலீஸ்காரர் வால்டரை அழைத்துச் சென்றனர்.

வால்டர் அவர்களிடம் தான் பெல்ஹாப்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளதாகவும். அது தனது முதல் நாள் பணி. கார் பழுதடைந்ததால் நடந்து வந்தபோது போலீஸார் தன்னை அழைத்து வந்ததாகவும் கூறினார்.

வால்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்துபோன் லேமி இது குறித்து தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். மேலும் பெல்ஹாப்ஸ் நிறுவன சிஇஓவையும் டேக் செய்தார். வால்டரின் ஆச்சரியத்துக்கு டென்னிஸியில் இருந்து பெல் ஹாப்ஸ் நிறுவன சிஇஓ பெல்ஹாமுக்கு வந்தார். அங்கு வந்த அவர் தனது ஃபோர்டு காரை வால்டருக்குப் பரிசாக வழங்கினார்.

இதை சற்றும் எதிர்பாராத வால்டர் தனது பணி அர்ப்பணிப்புக்குக் கிடைத்த பரிசு என கண் கலங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close