[X] Close
 

14500 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ரொட்டி!- ஜோர்டனில் கண்டுபிடிப்பு


world-s-oldest-bread-found-at-prehistoric-site-in-jordan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Jul, 2018 16:48 pm
  • அ+ அ-

ஜோர்டானின் வடகிழக்குப் பகுதியிலிருந்து 14500 ஆண்டுகளுக்கு முன் ரொட்டித் துண்டுகள் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தீயில் சுடப்பட்ட அவை தட்டையான ரொட்டி போன்றும், பல தானிய வகைகள் சேர்த்தும் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து கறுப்பு பாலைவனத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த தொல்லியல் ஆய்வாளர்கள், "கிழக்கு மத்தியதரைகடல் பகுதியில் விவசாயம் பழகுவதற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ரொட்டி தயாரிக்கும் முறை இருந்திருக்கிறது. 

தட்டையான அந்த ரொட்டியை பார்லி, ஓட்ஸ், சில கிழங்கு வகைகளைக் கொண்டு மாவு செய்து தயாரித்திருக்கின்றனர். நட்டுஃபியர்கள் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வகை ரொட்டியைத் தயாரித்திருக்கின்றனர்" எனத் தெரிவித்தனர்.
உலகில் உள்ள பல நாடுகளில் ரொட்டிகள் பிரதான உணவாக இருக்கின்றன. ஆனால், இது எப்போது தோன்றியது என்ற தகவல் தெளிவாக இல்லை.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close