[X] Close

பாடகரை கட்டியணைத்த சவுதி இளம் பெண் கைது


saudi-woman-held-for-hugging-singer

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Jul, 2018 11:26 am
  • அ+ அ-

சவுதி அரேபியாவில் மேடைப் பாடகரை கட்டியணைத்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு 2 ஆண்டுகள் சிறையும், 1 லட்சம் சவுதி ரியாலும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில் இராக் பாப் பாடகர் மஜித் அல் முஹாந்திஸை பெண் ஒருவர் கட்டியணைக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில், "மெக்கா மாகாணத்தில் உள்ள டைஃப் பகுதியில் மஜித் அல் முஹாந்திஸின் இசை நிகழ்ச்சி நடந்தது. 

மஜிதின் இசை நிகழ்ச்சியில் நண்பர்களுடன் கலந்து கொண்ட இளம் பெண் மஜிதை கட்டியணைத்தார். இது சட்டவிரோதமானது என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.

மஜித் காதல் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்றவர். அவரது பாடல்களுக்கு சவுதியில் பலத்த வரவேற்பு உள்ளது.
சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அண்மையில்தான் அனுமதி வழங்கப்பட்டது. அதே போல் பெண்கள் மைதானத்துக்கு வந்து விளையாட்டு போட்டிகளைக் காணவும் இசை நிகழ்ச்சிகளைக் காணவும் அண்மையில்தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இசை நிகழ்ச்சியில் பாடகரைக் கட்டியணைத்த பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு சில உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் பெண்கள் ஏதாவது வகுப்புகளில் சேர வேண்டும் என்றாலும் அவர்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும் என்றாலோ அல்லது மருத்துவ பரிசோதனைகளுக்கோ ஆண்களின் அனுமதி தேவைப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close