[X] Close

தாய்லாந்து குகைக்குள் 17 நாட்கள்: சிக்கியது முதல் தப்பித்தது வரை..


a-day-by-day-look-at-the-thailand-cave-ordeal

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Jul, 2018 12:09 pm
  • அ+ அ-

தாய்லாந்தில் உள்ள லாம் துவாங் குகைக்குள் கடந்த 17 நாட்களாக உணவின்றி சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் மற்றும் கோச் ஒருவர் என 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

17 நாட்களாக நடந்தது என்ன?

ஜூன் 23: ஒயில்ட் போர்ஸ் என்ற இளம் கால்பந்து வீரர்கள் அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அவர்களதுக் பயிற்சியாளருடன் காலை பயிற்சியை முடித்துவிட்டு சைக்கிளில் தம் லுவாங் நாங் நோன் குகைக்குச் சென்றனர். அப்போதுதான் அங்கு பெருமழை பெய்யத் தொடங்கியிருந்தது. அன்றைய தினம் மாலை வெகு நேரமாகியும் சிறுவர்கள் யாரும் வீடு திரும்பவில்லை. சிறுவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் தேடிச் சென்றபோது சிறுவர்களின் சைக்கிள்கள் குகை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஜூன் 24: உள்ளூர்வாசிகளுடன் மீட்புக் குழுவினரும் இணைந்து கொண்டு தேடுதலைத் தொடங்கினர். சிறுவர்களின் காலணிகள், பைகள் ஆகியன குகை வாசலில் இருந்தன.

ஜூன் 25: சிறுவர்களின் கைரேகை, கால் அச்சு ஆகியன குகையின் நுழைவுவாயிலில் இருந்து சற்று தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. குகைக்கு வெளியில் குழுமிய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டனர்.

ஜூன் 26: தாய்லாந்து நாட்டின் கடற்படையின் சீல் பிரிவினர் குகைக்குள் நீந்தி செல்ல முற்பட்டனர். ஆனால், குகைக்குள் சேறு நிரம்பியிருந்ததால் அவர்களால் முன்னேற முடியவில்லை. குகையின் கூரை வரைக்கும் தண்ணீர் நிரம்பியிருந்தது.

ஜூன் 27: தாய்லாந்தின் கனமழை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து பிரிட்டனில் இருந்தும் குகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்களுடன் தனியார் குகை நிபுணர்களும் இணைந்து கொண்டனர்.

ஜூன் 28: குகையிலிருந்து துளை போட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது. அதேவேளையில் குகைக்குள் நுழைய வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்ற ஆய்வும் முடுக்கிவிடப்பட்டது.

ஜூன் 29: தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா குகை பகுதிக்கு நேரில் வந்து சிறுவர்களின் பெற்றோர் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். குகையிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

ஜூன் 30: காணாமல் போனவர்களை கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டது. மழையும் சற்று ஓய்ந்திருந்ததால் மீட்புப் பணிகள் தீவிரமடைந்தன. ஆஸ்திரேலியா, சீனாவில் இருந்தும் குகை நிபுணர்கள் வந்திருந்தனர். குகையிலிருந்து சிறுவர்களை மீட்டவுடன் எப்படி அவர்களை பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்புவது என்பதற்கான ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

ஜூலை 1: மீட்புக் குழுவினர் குகைக்குள் இன்னும் சிறிது தூரம் முன்னேறினர் அங்கேயே ஒரு தளத்தை அமைத்தனர். ஒரு குறுகிய வளைவில் குகைப்பாதை இரண்டாகப் பிரிவதை தாய்லாந்து கடற்படையினர் கண்டறிந்தனர்.

ஜூலை 2: பிரிட்டன் குகை நிபுணர்கள் இருவர் காணாமல் போன சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவர்களுடைய வீடியோவை பதிவு செய்தனர்.

ஜூலை 3: சிறுவர்கள் தங்களை ஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீடியோக்கள் வெளியிடப்பட்டது. சிறுவர்கள் ஆரோக்கியமாக இருப்பதும் தெரியவந்தது.

ஜூலை 4: இதனையடுத்து தாய் நேவி மருத்துவரும் கடற்படை வீரர்களும் சிறுவர்களுக்கு உணவும் மருந்துகளும் கொண்டு சென்றனர். சிறுவர்களை முக்குளிப்பவர்களின் உதவியுடன் உடனடியாக வெளியே கொண்டு வருவதா அல்லது குகைக்குள் இருந்து நீர் வெளியேறும் வரை அவர்களை அங்கே பத்திரமாக வைப்பதா என்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஜூலை 5: சிறுவர்களுக்கு டைவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருவேளை அவர்களை தண்ணீருக்கு அடியிலேயே மூழ்கி நீந்தி வரச்செய்ய வேண்டுமானால் அதற்கு பயிற்சி தேவை என்பதால் அது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ஜூலை 6: சிறுவர்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக மீட்பதே சிறந்தது என முடிவு செய்யப்பட்டது. குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வந்ததாலும் மழை பெய்து மேலும் வெள்ள நீர் குகைக்குள் புக வாய்ப்பிருக்கிறது என்பதாலும் சிறுவர்களை உடனடியாக மீட்க முடிவு செய்யப்பட்டது.

ஜூலை 7: சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என அதிகாரிகள் கூறினர்.

ஜூலை 8: மீட்புக் குழுவின் தலைவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். முக்குளிக்கும் வீரர்கள் சிறுவர்களை மீட்கும் பணியில் இறங்குவதாக அவர் கூறினார். அன்றைய தினமே டைவர்கள் 4 சிறுவர்களை மீட்டு வந்தனர்.

ஜூலை 9: வீரர்கள் மேலும்  சிறுவர்களை மீட்டு வந்தனர்.

ஜூலை 10: எஞ்சியிருந்த  சிறுவர்களையும் கோச்சையும் வீரர்கள் மீட்டனர். இரண்டு வாரங்களாக நீடித்த பரபரப்பு தீர்ந்தது. 1 உயிர்களும் பாதுகாக்கப்பட்டது.

தாய்லாந்து அரசுக்கும் அதற்கு உதவியாக இருந்த இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close