[X] Close
 

#MeToo பாணியில் பிரேசிலில் ஒரு புதிய பிரச்சாரம்.. LetHerWork


female-sports-journalists-launch-letherwork-movement-in-brazil

  • பாரதி
  • Posted: 10 Jul, 2018 11:38 am
  • அ+ அ-

பிரேசில் நாட்டின் பெண் விளையாட்டுச் செய்தியாளர்கள் இணைந்து ஒரு புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். பணியிடத்தில் பாலின சீண்டல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் ஆளாவதை தடுக்கும் வகையில் இந்த பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். இதற்கு LetHerWork எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளர் ஒருவருக்கு கூட்டத்தில் இருந்த நபர் முத்தமிடும் காட்சி வைரலானது. அதற்கு அந்தப் பெண் கடும் கண்டனம் தெரிவித்ததும் பதிவானது. நடப்பு கால்பந்து திருவிழாவில் மட்டும் இதுவரை 4 பெண் செய்தியாளர்கள் இத்தகைய அத்துமீறலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விளையாட்டுச் செய்திகளை சேகரிக்கும் பெண் செய்தியாளர்கள் இதுபோல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் செய்திகள் ஒவ்வொன்றாக இணையவெளியில் வெளிவரத் தொடங்கின.
இந்நிலையில்தான், பிரேசில் நாட்டின் பெண் விளையாட்டுச் செய்தியாளர்கள் இணைந்து ஒரு புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

#MeToo பாணியில்
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, #MeToo என்றொரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தில் ஹாலிவுட் பிரபல நடிகைகள் முதல் கல்வியாளர்கள் வரை பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்களை சாட்சியாக முன்வைத்தனர்.

தற்போது பிரேசில் பெண் செய்தியாளர்கள் உருவாக்கியுள்ள LetHerWork பிரச்சாரத்தின் நோக்கம், பெண் செய்தியாளர்கள் விளையாட்டுச் செய்திகளை சேகரிக்கச் செல்லும்போது பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதையும், அலுவலகத்தில் பெண்களால் விளையாட்டுச் செய்தியை துல்லியமாக சேகரிக்க முடியுமா என்ற சந்தேகப் பார்வையைப் போக்கவும் இந்தப் பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் பிரேசில் பெண் பத்திரிகையாளர்கள் ஒரு வாட்ஸ் அப் குரூப்பை ஆரம்பித்தனர். அதில் தங்கள் செய்திகளைப் பகிர்ந்தனர். பின்னர் இன்னும் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் பிரேசில் பத்திரிகையாளர்கள் பலர் #DeixaElaTrabalhar என்ற வீடியோவை ட்ரெண்ட் செய்தனர். இதற்கு 'அவளை வேலை செய்ய விடுங்கள்' LetHerWork என்பதே அர்த்தம். இந்த வீடியோவில் விளையாட்டுச் செய்திகளை சேகரிக்கும்போது பெண் செய்தியாளர்கள் பலர் சந்திக்க நேரிட்ட பாலியல் சீண்டல்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த அத்துமீறலை கண்டிப்பதாகவும் இனியும் இதை அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த வீடியோவுக்கு தற்போது பலத்த வரவேற்பு இருக்கிறது.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close