[X] Close

பாஸ்வேர்டுகளை ஸ்க்ரீன்ஷாட் அடிக்கும் ஃபோன் ஆப்களிடம் ஜாக்கிரதை!


popular-apps-may-secretly-take-screenshots-of-your-phone-activity

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jul, 2018 15:55 pm
  • அ+ அ-

வீட்டில் பதுக்கிவைக்க முடியாத ரகசியத்தைக் கூட ஃபோனில் பதுக்கிவைக்கும் காலமிது. எல்லாவற்றிற்கும் அப்ளிகேஷன்களும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. நமது ஃபோன்களில் நாம் தரவிறக்கம் செய்யும் சில பாப்புலர் ஆப்களால் நமது ஃபோன் நடவடிக்கைகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை மூன்றாவது நபர்களுக்கு அனுப்ப முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

யூஸர்நேம், பாஸ்வேர்டுகள், க்ரெடிட் கார்டு எண்கள், இன்னும் சில முக்கிய தனிநபர் தகவல்களை இந்த அப்ளிகேஷன்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் சாப்னெஸ், "ஆயிரக்கணக்கான பாப்புலர் அப்ளிகேஷன்கள் நீங்கள் உங்கள் மொபைலில் டைப் செய்யும் எதை வேண்டுமானாலும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவல்லது.
நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்டு கருப்பு புள்ளியாக மாறுவதற்கு முன்னதாகவே அந்த அப்ளிகேஷன் எழுத்துகளை கணித்துவிடும்.

இதற்காக 17,000 பாப்புலர் அப்ளிகேஷன்களைக் கொண்டு ஆண்ட்ராய்டு ஃபோன்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் 9000 ஆப்களால் ஆண்ட்ராய்டு ஃபோன் தகவல்களை ஸ்கிரீன்ஷாட் அடிக்க முடிந்தது.

ஒரு முறை ஸ்கீர்னில் நடைபெறுவதை ஒரு ஆப் வீடியோவாகவே எடுத்து அதை மூன்றாவது நபருக்கு அனுப்பியதும்கூட இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இப்படியாக ஸ்க்ரீஷாட் எடுக்கப்படும் தகவல்கள் எல்லாம் டேடா அனலிடிக்ஸ் நிறுவனங்களுடன் பகிரப்படுகின்றன. 

அதேவேளையில் இத்தகைய ஸ்க்ரீன்ஷாட்டுகள் விஷமிகளிடம் சிக்கும் அபாயமும் இல்லாமல் இல்லை என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close