[X] Close
 

உலகின் டாப் 3 பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஸுக்கர்பர்க்


mark-zuckerberg-tops-warren-buffett-to-become-third-richest-person-in-the-world

  • பாரதி
  • Posted: 07 Jul, 2018 17:17 pm
  • அ+ அ-

நாம் எல்லாம் பைசாவை செலவழித்து டேட்டாவை மெயின்டெய்ன் செய்து சதா ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்க அதன் நிறுவனர் ஃபேஸ்புக் நிறுவனர் உலகில் டாப் 3 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

முதன் முறையாக மூன்று இடங்களையும் தொழில்நுட்ப ஜாம்பவான்களே பிடித்திருக்கின்றனர். முதல் இடத்தில் மைக்ரோசாஃப்ட் அதிபர் பில் கேட்ஸ் உள்ளார். இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ், மூன்றாவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் உள்ளார்.

3-வது இடத்திலிருந்த வாரன் பப்ஃபெட்டை மார்க் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.
மார்க் ஸுக்கர்பர்கின் சொத்து மதிப்பு 81.6 மில்லியன் அமெரிக்க டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் இண்டக்ஸ் நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

வேறு எந்த துறையிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப துறை சார்ந்த சொத்துகள் ப்ளூம்பெர்க் இண்டக்ஸ் கணக்கெடுப்பில் உள்ள 5 ட்ரில்லியன் டாலர் சொத்தில் 5%மாக இருக்கிறது.

வாரன் பப்ஃபெட் பின்னடைவுக்குக் காரணம் அவர் தனது சொத்துகளின் பெரும் பங்கினை தானமாகக் கொடுத்திருப்பதே. பெர்க்‌ஷைர் ஹேத்வே கிளாஸ் பி ஷேரின் 290 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை பப்ஃபெட் கேட்ஸ் பவுண்டேஷனுக்கு தானமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close