[X] Close

ட்ரெய்லருக்குப் பதிலாக படத்தை அப்லோட் செய்த சோனி!


oops-sony-accidentally-uploaded-the-entire-movie-on-youtube-instead-of-a-trailer

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jul, 2018 10:31 am
  • அ+ அ-

தியேட்டரில் படம் வருவதற்கு முன்னரே இணையத்தில் ரிலீஸ் செய்யும் தமிழ் ராக்கர்ஸை விஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் யூடியூப் சேனலில் ஒரு படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்வதற்குப் பதிலாக படத்தையே ரிலீஸ் செய்துள்ளது.

காளி த கில்லர் (Khali the Killer) இப்படத்தை ஜான் மாத்யூஸ் இயக்கியுள்ளார். படத்தின் நாயகர் ரிச்சர்ட் கப்ரால். இந்த படத்தை சோனி நிறுவனம் தயாரித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படத்தின் ட்ரெய்லருக்குப் பதிலாக 90 நிமிடங்கள் ஓடும் படமே ரிலீஸ் செய்யப்பட்டது. 
இதை யாரும் கவனிக்கவில்லை. சுமார் 8 மணி நேரத்துக்குப் பின்னர்தான் சிபிஆர்.காம் என்ற இணையதளம் இது குறித்து செய்தி வெளியிட்டது. அதன் பின்னரே படம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது.

படம் 8 மணி நேரம் ஓபன் சோர்ஸில் இருந்ததால் படத்தை யூடியூபிலேயே வாடகை அடிப்படையில் காண வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் ஆகஸ்ட் 31-ல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close