[X] Close
 

இது என்ன மாதிரியான ரிப்போர்ட்டிங்?!


this-pakistani-reporter-goes-overboard-to-cover-monsoon-floods

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jul, 2018 15:55 pm
  • அ+ அ-

தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் ஊடகங்கள் புற்றீசல்கள் போல் பெருகித்தான் வருகின்றன. இப்படி பெருகிவரும் ஊடகங்களால்தான் நம் மண்டையைப் பிளக்கின்றன பிரேக்கிங் நியூஸ்கள். விதவிதமான மியூசிக்குகள் வித்தியாசமான டைட்டில் கார்டுகள் கேமரா ஆங்கிள்கள் என நூதனத்தைப் புகுத்த பாடாய்ப்பட வேண்டியிருக்கிறது போட்டி ஊடகங்கள்.

ஊடகங்களின் இந்த போட்டா போட்டியின் விளைவு மீடியா மெனாஸ் (Media Menace) என்று மக்கள் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.

சரி இப்போது ஏன் இதெல்லாம் சொல்லப்படுகிறது எனக் கேட்கிறீர்களா? பாகிஸ்தான் செய்தியாளரின் ரிப்போர்ட்டிங் தான் காரணம்.

பாகிஸ்தானில் இது பருவமழை காலம். லாகூர் நகரின் ஒரு பகுதியில் மழை வெள்ளத்தால் தெருக்கள் நீச்சல் குளம் போல் காட்சியளிக்க அங்கிருந்து ரிப்போர்ட் செய்த செய்தியாளர் ஒருவர் பின்க் கலர் மிதவையில் அமர்ந்திருந்தார். குழந்தைகள் விளையாடும் மிதவைகள் அவரைச் சுற்றிலும் இருந்தன. அந்த மிதவைகளைக் காட்டும் அந்த செய்தியாளர், "நான் நீச்சல் குளத்தில் இருக்கிறேன் என நினைத்துவிடாதீர்கள். சாலையின் நடுவில் இருக்கிறேன். லாகூரின் இந்த சாலை போன்றே நகரின் பல்வேறு சாலைகளும் இருக்கின்றன" எனக் கூறுகிறார். 

அத்தோடு நின்றால் பரவாயில்லை. "இப்படி சாலையில் மிதவையில் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்களும்கூட இதுமாதிரி முயன்றுபாருங்கள். எப்படியும் தண்ணீர் இப்போதைக்கு வடியப்போவதில்லை" எனக் கூறுகிறார்.
இது என்ன மாதிரியான ரிப்போர்ட்டிங் என்பதை ஆய்வு செய்துதான் எழுத வேண்டும்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close