[X] Close

நீங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ஃபோன் வைத்திருக்கிறீர்களா?  


samsung-phones-are-randomly-sending-owners-photos-to-contacts

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jul, 2018 14:04 pm
  • அ+ அ-

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ரக மொபைல் ஃபோனிலிருந்து அதன் உரிமையாளரின் அனுமதி இல்லாமலேயே தொடர்பு எண்களில் இருப்பவர்களுக்கு ஃபோட்டோக்கள் செல்வதாக புகார் எழுந்திருக்கிறது.

இப்போதைக்கு எஸ்-9 மற்றும் எஸ்9 + சாம்சங் மொபைல் மாடல்களில் மட்டும்தான் இந்தப் பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது.

இது குறித்து தி வெர்ஜ் இணையத்தில், "சாம்சங் எஸ்-9, எஸ்-9+ மொபைல்களில் உள்ள டீஃபால்ட் டெக்ஸ்டிங் ஆப் மூலம் ஃபோட்டோகள் பகிரப்படுவது தெரியவந்துள்ளது.

இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றல் எந்தெந்த ஃபைல்கள் இவ்வாறு தானாகவே அனுப்பப்படுகின்றன என்பதுகூட ஃபோன் உரிமையாளருக்குத் தெரிவதில்லை.

இந்தப் பிரச்சினையில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க சாம்சங் மெசேஜிங் ஆப்புக்கு அளித்துள்ள ஸ்டோரேஜ் ஆக்சஸை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close