[X] Close
 

சாக்கடையில் புரண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்


karachi-politician-lays-in-puddle-of-sewage-water-to-ask-for-votes-photos-go-viral

  • பாரதி
  • Posted: 01 Jul, 2018 22:03 pm
  • அ+ அ-

சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாக்கடையில் புரண்டு வாக்கு சேகரித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அட இது நடந்தது நம்மூரில் இல்லைங்க. பாகிஸ்தானில்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் 243-வது தொகுதியிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிடும் ஆயாஸ் மேமன் மோட்டிவாலாதான் இப்படிச் செய்திருக்கிறார். அவர் தொகுதி மக்களின் குறைகளைப் புரிந்து கொண்டதை உணர்த்துவதற்காக அப்பகுதியில் தேங்கி நின்ற கழிவுநீரில் புரண்டு வாக்கு சேகரித்தார். ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் அவர் விமர்சிக்கத் தவறவில்லை. இதை, அவர் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். 

ஆனால், நெட்டிசன்கள் பலர் விமர்சித்திருக்கின்றனர். ஆயாஸ் மேமன் விளம்பரம் தேட இப்படிச் செய்வதாகவும் தேர்தல் முடிந்ததும் காணாமல் போய்விடுவார் என்றும் விமர்சித்துள்ளனர்.

அதேவேளையில் சிலர் மேமனுக்கு பாராட்டுகளையும் தெரிவித்திருக்கின்றனர். மக்கள் பிரச்சினையைத் தெரிந்து கொள்ளக்கூட விரும்பாத அரசியல்வாதிகள் மத்தியில் மக்கள் பிரச்சினையில் பங்கெடுப்பவர் மேலானவர் எனப் பாராட்டியுள்ளனர்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close