[X] Close
 

திக்கித் திணறி ஒரு லைவ் ரிப்போர்ட்டிங்!- ட்விட்டரில் குவியும் அன்பு


pakistani-reporter-chand-nawab-once-again-rocks

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Jun, 2018 10:23 am
  • அ+ அ-

செய்தி வாசிப்பாளரோ அல்லது நேரலையில் செய்தியை சொல்லும் செய்தியாளரோ அவர்களின் உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இருக்க வேண்டும், அவர்களின் பேச்சு கோர்வையாக தெளிவாக இருக்க வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம்.
ஆனால், பாகிஸ்தானின் இண்டஸ் நியூஸ் சேனலின் சந்த் நவாப்பை மட்டும் அப்படி எல்லாம் எதிர்பார்ப்பதில்லை.

பாகிஸ்தான் நாட்டவராக இருக்கட்டும் இல்லை இந்தியர்களாக இருக்கட்டும் சாந்த் நவாப் என்றால் தனி பிரியம்தான்.
அப்படி இல்லாமலா பாலிவுட் படமான பஜ்ரங்கி பாய்ஜானில் சந்த் நவாபைப் போலவே நவாசுதீன் சிக்கிக்கிக்கு ஒரு கதாபாத்திரம் வழங்கப்பட்டது.

கடந்த 2008-ல் ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வோர் குறித்து ரயில்வே நிலையத்திலிருந்து அவர் அளித்த நேரடி ரிப்போர்ட் இணையதளங்களில் வைரலானது. திக்கித் திணறி பேசினாலும்கூட அதில் ஏதோ அப்பாவித்தனம் கலந்திருப்பதாகக் கூறி இணையவாசிகள் அவருக்கு ரசிகராயினர்.

இந்நிலையில், தற்போது மீண்டும் பிரபலமாகியிருக்கிறார் சந்த் நவாப். பான் மசாலா கடையில் நின்று செய்தி நேரலையில் பேசிய சந்த் வழக்கம்போல் வார்த்தைகளை திக்கித் திணறி பேசுவதும் முடிவில் ஒரு முழு பான் மசாலாவை தனது வாயில் திணிப்பதும் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் மிகப் பிரபலமான கவிஞரும் பத்திரிகையாளருமான பசீல் ஜமீலி தனது ட்விட்டர் பக்கத்தில், "மீண்டும் வந்துவிட்டார் சந்த் நவாப். இந்த முறை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் குறித்து ரிப்போர்ட் அல்ல. இது வேறு. அசத்தல்" என ட்வீட் செய்திருக்கிறார்.

பாலிவுட் பாடகர் அத்னான் சாமியும் சந்த் நவாபின் பான் மசாலா ரிப்போர்டிங் ட்வீட்டை பகிர்ந்திருக்கிறார். இன்னும் பல பிரபலங்கள் சாந்த் நவாப் ரிப்போர்ட்டிங்கை வரவேறு ட்வீட் செய்துவருகின்றனர்.

 

சந்த் நவாபின் சமீபத்திய வீடியோ:

 

சந்த் நவாபின் 2008 வீடியோ:



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close