[X] Close

வித்தியாசமான முறையில் 'பாட்டில் சேலஞ்ச்' செய்த அமெரிக்கப் பாடகி


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 16:57 pm
  • அ+ அ-

வித்தியாசமான முறையில் 'பாட்டில் சேலஞ்ச்' செய்திருக்கிறார் அமெரிக்கப் பாடகி மரியா கேரி.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், ஃபிட்னஸ் சேலஞ்ச் என்ற வரிசையில் தற்போது ‘பாட்டில் மூடி' என்ற புதிய சவால் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கஜகஸ்தானைச் சேர்ந்த டேக்வாண்டோ தற்காப்புக் கலை வீரர் பராபி டாவ்லட்சின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஒருவர் தண்ணீர் பாட்டிலைப் பிடித்திருக்க ‘பேக் கிக்' முறையில் அடுத்தடுத்து வலது, இடது காலால் பராபி எட்டி உதைக்கிறார். அப்போது பாட்டிலின் மூடி மட்டும் தனியாக சுழன்று தெறித்துப் பறக்கிறது.

இந்த சாகசத்தை வேறு யாராவது செய்ய முடியுமா என்று அவர் சவால் விடுக்க, சமூக வலைதளங்களில் ‘பாட்டில் சேலஞ்ச்' சவால்  பரவியது.

இதனைத் தொடர்ந்து டிரான்ஸ்போர்ட்டர் ஹாலிவுட் படம் புகழ் நடிகர் ஜேசன் ஸ்டேதம், அமெரிக்க பாப் பாடகர் ஜான் மேயர், அயர்லாந்தைச் சேர்ந்த யு.எப்.சி. சாம்பியன் கார்னர் மெக் கிரேகர், யு.எப்.சி. லைட்வெயிட் சாம்பியன் ஜெரோமி மேக்ஸ் ஹாலோவே, ஹாலிவுட் நடிகை வொயிட்னி கம்மிங்ஸ்,  பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், சித்தார் மல்ஹோத்ரா, வித்யூத் ஜமால், கோலிவுட் நடிகர் அர்ஜுன் போன்றவர்கள் பாட்டில் சேலஞ்ச் செய்து வெளியிட்டனர்.

இதில் பலர் வித்தியாசமான முறையிலும் பாட்டில் சேலஞ்ச் செய்து வருகின்றனர். அவற்றில் பல நம்மில் சிரிப்பை வரவழைக்கவும் தவறுவதில்லை.

அந்த வகையில் அமெரிக்கப் பாடகி மரியா கேரி ’பாட்டில் சேலஞ்ச்’ வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில் தூரமாக நின்றுகொண்டு கட்டிடமே எதிரொலிக்கும்படி கத்துகிறார் மரியா. இதில் அவருக்கு எதிரே இருக்கும் பாட்டில் மூடி பறந்து கிழே விழுகிறது.

வீடியோ  

 

தற்போது இந்த வீடியோ லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close