[X] Close

பாதுகாப்பாக இருங்கள்: ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 14:19 pm
  • அ+ அ-

ஈரான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனிய இருப்பை அதிகரிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை ஈரான் அரசு உறுதிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, “ஈரானின் அணுசக்தி திட்டத்தின் சமீபத்திய விரிவாக்கம்  அந்த நாட்டை தனிமைப்படுத்தப்படுவதற்கும் பொருளாதாரத் தடைகளுக்கும் வழிவகுக்கும். மேலும், ஈரானின் அரசு அணு ஆயுதங்களை ஏந்தியிருப்பது உலகிற்கு ஆபத்தை விளைவிக்கும்” என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்  நியூஜெர்சி விமான நிலையத்தில் ட்ரம்ப்பிடம் ஈரான் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ட்ரம்ப் ”ஈரான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா மோதல் வலுத்து வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close