[X] Close

உளவு பார்த்ததை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய மாணவர்: வடகொரியா தகவல்


  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 17:29 pm
  • அ+ அ-

வடகொரிய அரசின் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதால் மாணவர் அலெக் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவில்  கில் இல் சங் பல்கலைக்கழகத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக் சிங்லே (29) முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலெக் காணாமல் போனதாகவும் அவர் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை என்றும் அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அலெக் வியாழக்கிழமை வடகொரிய அரசால் விடுதலை செய்யப்பட்டார்.

JAPANAUSTRALIANORTHKOREA.jfif 

அலெக் சிங்லே எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதற்கான தெளிவான தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் இதற்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடகொரிய ஊடகங்கள், ''அலெக் வடகொரிய அரசின் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதை நேர்மையாக ஒப்புக் கொண்டார்.

மேலும் வடகொரிய இறையாண்மையை மீறியதற்காக மன்னிப்பு கோரினார்'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close