[X] Close

‘நான் நலமாக இருக்கிறேன்’ - வடகொரியாவால் விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய மாணவர்


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 13:58 pm
  • அ+ அ-

வடகொரியாவால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட மாணவர் அலெக்  தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில்  கில் இல் சங் பல்கலைகழகத்தில் அலெக் சிங்லே (29) முதுகலை பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலெக் காணாமல் போனதாகவும் அவர் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று அவரது பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அலெக் வியாழக்கிழமை வடகொரிய அரசால் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட பிறகு அலெக் பேசியதாவது, “நான் நலமாக இருக்கிறேன் என்பதை அனைவரும் அறிய வேண்டும். அதுமட்டுமில்லாது எனது நலன் குறித்து அக்கறை கொண்ட அனைவர்களுக்கு, எனது குடும்பத்திற்கு இந்நேரங்களில் ஆதரவு அளித்தற்கு நன்றி.

நான் எனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதற்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

எந்தவித பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு தான் தயராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுக்கு அலெக் நன்றி தெரிவித்ததுடன் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஊடகங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

வடகொரியாவால் அலெக் சிங்லே எதற்காக கைது செய்யப்பட்டார். என்பதற்கான தெளிவான தகவல் ஏதுல் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close