[X] Close

கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 18:01 pm
  • அ+ அ-

கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியம் மையம் தரப்பில், “கனடாவில் இன்று (வியாழக்கிழமை) ஹைடா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close