[X] Close

கடும் மழையை தொடர்ந்து ஜப்பானில் நிலச்சரிவு: ஒருவர் பலி


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 16:15 pm
  • அ+ அ-

ஜப்பானில் கடும் மழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பானின் தென் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதில் ககோஷிமாவில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை ஒரு மணிநேரத்தில் மட்டுமே 40 மி.மீ. .மழை பதிவாகியது.

சில பகுதிகளில் மணிக்கு 80 மி.மீ . வரை  மழை பெய்யக்கூடும் என்று ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் மழை பெய்யும் தருணங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

gfvc.jpg 

இந்நிலையில் நேற்று கடும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.

வியாழக்கிழமை மட்டும் பல்வேறு மாகாணங்களிலிருந்து வியாழக்கிழமை மட்டும் சுமார் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மழையின் அளவு குறையும் வரை பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்கள் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close