[X] Close

இனிமேல் கவலையில்லை: இந்திய ரூபாயிலேயே துபாய் விமான நிலையத்தில் பொருட்கள் வாங்கலாம்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 16:09 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

துபாயில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள டூட்டி ஃப்ரீ வர்த்தக நிலையங்களில் இந்திய ரூபாயிலேயே அனைத்துப் பொருட்களையும் வாங்கலாம். இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இந்தியர்கள் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வேலை நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காகவும் சென்று வருகின்றனர். அவர்கள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் அமெரிக்க டாலர்களாகவோ, பவுண்ட்ஸ், யூரோ, திர்ஹம் ஆகியவற்றை மாற்றிச் செல்ல வேண்டியது இருந்தது.

இனிமேல் துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 3 பிரிவுகளிலும், அல் மக்தும் விமான நிலையத்திலும் உள்ள டூட்டி ஃப்ரீ வர்த்தக மையங்களில் இந்திய ரூபாயைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கலாம் என்று கல்ஃப் நியூஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து துபாய் டூட்டி ஃப்ரீ அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்திய ரூபாயை விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஏற்குமாறு கூறப்பட்டுள்ளது. இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டோம்" எனத் தெரிவித்தார்.

duty.jpg 

இந்திய ரூபாயை துபாயில் ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டு இருப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். இந்திய ரூபாயை, திர்ஹம், டாலர், பவுண்ட் ஆகியவற்றாக மாற்றும்போது கமிஷன் தொகை கொடுப்பது சேமிக்கப்படும். ஆண்டுக்கு 9 கோடி பயணிகள் துபாய் விமான நிலையத்தைக் கடந்து செல்கிறார்கள். அதில் 1.22 கோடி பேர் இந்தியர்கள். கடந்த ஆண்டு மட்டும் 20 இந்தியர்கள் துபாய்க்கு பயணம் செய்துள்ளனர்.

கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட, துபாய் டூட்டி ஃப்ரீயில் பரிவர்த்தனையில் ஏற்கப்பட்ட 16-வது கரன்சி இந்திய ரூபாயாகும்.

துபாய் டூட்டி ஃப்ரீயில்  கடந்த ஆண்டு மட்டும் 215 கோடி டாலருக்கு இந்தியர்கள் மூலம் வர்த்தகம் நடந்துள்ளது. இது ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 18 சதவீதமாகும். துபாய் டூட்டி ஃப்ரீயில் தற்போது 47 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இந்தியர்கள் அதிகபட்சமாகப் பணி புரிகிறார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close