[X] Close

இப்படியெல்லாம் கூடவா போட்டி நடத்துவார்கள்?! இப்படியும் கூடவா புத்திக்கூர்மை இருக்கும்?!


zsa-zsa-bags-world-s-ugliest-dog-title

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jun, 2018 15:34 pm
  • அ+ அ-

இப்படியெல்லாம் கூடவா போட்டி நடத்துவார்கள்? என்று யோசிக்க வைக்கும் செய்தியும். இப்படியும் கூடவா புத்திக்கூர்மை இருக்கும் என்று வியக்க வைக்கும் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. இரண்டு செய்தியும் நாய்கள் சம்பந்தப்பட்டதே என்பதால் வெவ்வேறு நாட்டில் நடந்திருந்தாலும் ஒன்றாகவேப் படிக்கலாம்.

உலகில் சில விநோதமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் விந்தையான ஒரு போட்டி நடத்தியுள்ளனர். உலகில் மிக அசிங்கமான நாய்க்குட்டி என்று ஒரு போட்டியை நடத்தியிருக்கின்றனர்.

இந்தப் போட்டியில் ஸ்ஸா ஸ்ஸா என்ற நாய்க்குட்டி வெற்றி பெற்றுள்ளது. இதன் உரிமையாளர் மேகன் பிரய்னார்ட் மினசோட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் ஸ்ஸா ஸ்ஸா தனது உரிமையாளருக்கு 1,500 அமெரிக்க டாலரை வென்று கொடுத்திருக்கிறது. 30 ஆண்டுகளாக இப்படி ஒரு போட்டி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்படி ஒரு போட்டி தேவைதானா?! என்று விலங்குகள் நல ஆர்வலர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது அடுத்த செய்தி..

அமெரிக்காவில் அழகில்லாத நாய் செய்தியானது என்றால். ஸ்பெயினில் புத்திசாலித்தனத்துக்காக ஒரு நாய் செய்தியாகியிருக்கிறது. ஸ்பெயினின் மாட்ரிட் நகர போலீஸுக்கு சொந்தமான நாய் ஒன்று மயங்கி விழுந்த போலீஸ்காரருக்கு சிபிஆர் எனப்படும் முதலுதவி அளிப்பதுபோல் செய்துகாட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் போலீஸ்காரர் ஒருவர் திடீரென மயங்கி விழுவதுபோல் நடிக்கிறார். உடனே பாய்ந்து வரும் நாய் ஒன்று அந்த போலீஸ்காரரின் நெஞ்சுப்பகுதியில் தனது முன்னங்கால்களை வைத்து அழுத்துகிறது. அவ்வப்போது அந்த நபர் மூச்சுவிடுகிறாரா என சோதிக்கிறது. பின்னர் அந்த போலீஸ்காரர் எழுந்து அமரவும் தனது அன்பை வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ட்வீட் செய்த மேட்ரிட் நகர போலீஸார், "நீங்கள் உங்களை நேசிப்பதைவிட உங்களை அதிகமாக நேசிக்கும் ஒரே ஜீவராசி நாய்" என்ற ஜோஷ் பில்லிங்ஸின் கவிதையை மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close