[X] Close

'பெண் தலாய் லாமா' குறித்த சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கேட்டார் தலாய் லாமா


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 16:35 pm
  • அ+ அ-

தலாய் லாமாவாக பெண் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கவரக்கூடியவராக இருக்க வேண்டும் என்று கூறிய கருத்துக்கு தலாய் லாமா மன்னிப்பு கேட்டார்.

திபெத்திய புத்த மதத் தலைவராக தலாய் லாமா உள்ளார். இவர் 14-வது புத்த மதத் தலைவராவார்.வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, 15-வது புத்த மதத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இந்நிலையில் புதிய தலாய் லாமாவாக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து தலாய் லாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தலாய் லாமா, "பெண் ஒருவர் தலாய் லாமாவாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்  கவரக் கூடியவராக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் அழகாக இல்லாவிட்டால், அவரைக் காண்பதற்கு பெரும்பாலானோர் விருப்பம் கொள்ள மாட்டார்கள் எனவும் தலாய் லாமா கூறினார்.

தலாய் லாமாவின் இந்தக் கருத்துக்கு வலுவாக எதிர்ப்புகள் வர, தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார் தலாய் லாமா. அதில், ”எனது வார்த்தைகள் மக்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் எனது மனப்பூர்வமான மன்னிப்பை அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன” என்று தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close