[X] Close
 

பெண்கள் பாதுகாப்பு ஆப்கன், சிரியாவைவிட இந்தியாவில் மோசம்: ஆய்வில் தகவல்


india-most-dangerous-country-for-women-survey

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jun, 2018 13:43 pm
  • அ+ அ-

பெண்கள் பாதுகாப்பு ஆப்கானிஸ்தான் சிரியா போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளைவிட இந்தியாவில் மிக மோசமாக இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. தாம்சன் அண்ட் ராய்ட்டர்ஸ் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கத்திய நாடுகளைப் பொருத்தவரையில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபின்னர் கூட பெண்கள் பாதுகாப்புக்காக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததே இந்தியா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கக் காரணம் என நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரம் வின்வெளித் துறையில் முன்னேறி வரும் நாடு என்ற பெருமையெல்லாம் இருந்தாலும்கூட பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளவில் முதலில் இருப்பது என்பது அவமதிப்பை ஏற்படுத்தும் அடையாளம்.

2007 - 2016 காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை 83% அதிகர்த்திருப்பதாக அரசு புள்ளிவிவரமே தெரிவிக்கின்றது. ஒவ்வொரு மணி நேரத்துக்கு 4 பலாத்காரங்கள் நடைபெறுகின்றன.

இந்தநிலையில் சர்வதேச அறிக்கை இந்தியா பெண்களின் பாதுகாப்புக்கு மிகவும் மோசமான நாடு எனத் தெரிவித்திருக்கிறது. ஐ.நா., சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களின் உடல்நலம், பொருளாதார பலம், கலாச்சார மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், பாலியல் வன்முறை அத்துமீறல், பாலியல் சாராத வன்முறை மற்றும் ஆள்கடத்தல் ஆகியனவற்றின் அடிப்படையில் எந்தெந்த நாடுகள் மோசமாக உள்ளன என்று அளவிடப்பட்டது. இதற்கு கிடைத்த விடைதான் இந்தியா. 

இப்படி ஒரு ஆய்வு முடிவு வந்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்திருக்கிறது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close