[X] Close

ஆப்கனில் பரவும் தலிபான்களின் ஆதிக்கம்


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 17:23 pm
  • அ+ அ-

ஆப்கனின் முக்கியப் பகுதியான துஷி மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அரசு  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பக்லான் ஆளுநர் ஷாகிப் காபூரி கூறும்போது, ''மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கயான் பள்ளத்தாக்கில் பக்லாம் மாகாணத்தில் உள்ள துஷி மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தலிபான்கள் அவர்களது எல்லையை மீறி உள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த கூடுதல் தகவல்களை பக்லான் ஆளுநர் தெரிவிக்கவில்லை. ஆனால், இதுகுறித்து தலிபான்கள் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கன் அரசுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.

முன்னதாக, ஆப்கனில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை விவாதிக்க அமெரிக்கப் பிரதிநிதிகள் மற்றும் தலிபான் தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close